மணவெளியில் 37 லட்சம் செலவில் சாலை கழிவுநீர் வாய்க்கால்

78பார்த்தது
மணவெளியில் 37 லட்சம் செலவில் சாலை கழிவுநீர் வாய்க்கால்
மணவெளி தொகுதியில் 37. 00 லட்சம் செலவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்கான பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் ஆர் அவர்கள் இன்று 12. 02. 2024 பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்‌. மணவெளி தொகுதி தவளைகுப்பம் விஐபி நகர் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளிலும் ரூ‌. 20. 00 லட்சம் மதிப்பில் சாலை அமைப்பதற்கான பணி மற்றும் நோணாங்குப்பம் பகுதியில் உள்ள ஆத்தங்கரை தெற்கு வீதிக்கு ரூ. 17. 00 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்கான பணி ஆகிய இரண்டு பணிகளுக்கான பூமி பூஜையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி