காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவுறுத்துதலின் பேரில் தேர்தல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் ஜனநாயக அறை துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.