தையல் பயிற்சி முடித்த மகளிருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

77பார்த்தது
தையல் பயிற்சி முடித்த மகளிருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான மக்கள் மேம்பாட்டு வினையகம் சார்பில் மகளிருக்கு 6 மாத தையல் பயிற்சியளிக்கப்பட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியை வண்டார்குழலி மகளிர் உடல் நலம் மற்றும் தன்னம்பிக்கை குறித்து பேசினார்.

டேக்ஸ் :