UPI பரிவர்த்தனைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த என்பிசிஐ திட்டமிட்டுள்ளது. தற்போதைய PIN எண்கள் மற்றும் OTP நீக்கப்படலாம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறிப்பிட்ட பின் எண்ணை வழங்கும் தற்போதைய முறையை மாற்றியமைத்து, இணையான பிற சாத்தியக்கூறுகளைத் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின் எண்கள், கடவுச்சொற்களுக்கு பதிலாக கைரேகை பயோமெட்ரிக் நுட்பங்களைப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.