அசம்பாவிதங்களை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்

65பார்த்தது
பெரம்பலூர் நகர் பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு, அசம்பாவிதங்களை தடுக்க சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்.

2024 -ம் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, இரவு நேரங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நடை பெறாமல் இருக்கவும், அவற்றை தடுக்கும் வகையிலும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின் பேரில், டிசம்பர் - 31-ம் தேதி இரவு நேர ரோந்து பணியில் சிறப்பு கூடுதல் காவலர்கள் ஈடுபட்டனர் இதில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு பாலக்கரை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், இதில் வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமலும், மது அருந்தியும் வாகனங்கள் ஓட்டி வருபவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி