தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கை நிகழ்வினை நேரலையாக பெரம்பலூர் மாவட்டத்தின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்கள் காணும் வகையில் 14 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.