மத்திய மோடி அரசை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
மத்திய மோடி அரசை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம், நடைபெற்றது. வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு பதிவு இயந்திர முறையை இரத்து செய்து , வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வரலாறு காணாத இயற்கை பேரிடருக்கு உரிய நிதி வழங்க மறுத்தும், இயற்கை பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய மோடி அரசை கண்டித்தும், ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ஜனவரி - 4ம் தேதி இன்று பகல் 12 மணி அளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன். ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் நகர செயலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வரவேற்புரையாற்றினார், இதனை தொடர்ந்து தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவித்து, நிதி வழங்காத மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி