ராமர் சிலை செய்ய கருங்கல் தந்தவருக்கு அபராதம்

4686பார்த்தது
ராமர் சிலை செய்ய கருங்கல் தந்தவருக்கு அபராதம்
கர்நாடகாவிலுள்ள ஒரு தலித் விவசாயியான 70 வயதான ராம்தாஸ் என்பவற்றின் நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட கருங்கல்லிலிருந்துதான் அயோத்தியில் உள்ள, ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டுள்ள புதிய பால ராமர் சிலை செய்யப்பட்டது. இதுகுறித்து அந்த விவசாயி கூறுகையில், தனது 2.14 ஏக்கர் மண்டிக்கிடந்த கற்களை அகற்ற உள்ளூர் குவாரி ஒப்பந்ததாரரிடம் குத்தகைக்கு விட்டு கற்களை அகற்றினேன். அதிலிருந்த ஒற்றை கல்லைதான் சிற்பி யோகிராஜ் தேர்ந்தெடுத்தார் என கூறியிருந்தார். இந்நிலையில் சட்ட விரோதமாக விவசாய நிலத்தில் கல்குவாரி நடத்தியதற்காக இவருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி