ஆண்டுக்கு ஒரு திருமணம்.. சிக்குவாரா பிளே பாய்

93027பார்த்தது
ஆண்டுக்கு ஒரு திருமணம்.. சிக்குவாரா பிளே பாய்
கணவரை பிரிந்து வாழும் திருப்பூரை சேர்ந்த தேவி என்ற பெண், குணசேகரன் என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார். குணசேகரன் நடத்தையில் சந்தேகம் வந்த தேவி விசாரித்ததில் அவருக்கு நிறைய பெண்களுடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனால் எழுந்த தகராறில் தேவியை விட்டு சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் இவரின் முதல் மனைவி கேரளாவை சேர்ந்த வனிதா என்பதும், கடந்த 2017ல் திருப்பூரை சேர்ந்த கனகா, 2019ல் கோவையை சேர்ந்த செல்லம்மாள், 2020ல் விழுப்புரத்தை சேர்ந்த சசிகலா, காளீஸ்வரி, கடைசியாக தேவி என 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய அவர், 7வதாக சிவகங்கை கல்லூரி மாணவியை திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி