ஊட்டி ரோஜா பூங்காவில் நடப்பாண்டு கோடை விழாவை ஒட்டி, 4, 200 வகைகளை சேர்ந்த, 40 ஆயிரம் ரோஜா செடிகள் தயார்படுத்தப்படுகிறது. சீசனுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் கடந்த மாதம் ரோஜா செட களுக்கு, 'புரூனிங்' செய்யப்பட்டது. பின், உரம் கலந்த தண்ணீர் பாய்ச்சப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் ரோஜா செடி பாதுகாக்க லாரி களில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சப்பட்டு வருகிறது. தற்போது, மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூக்க துவங்கியுள்ளது. மேலும் பூக்க துவங்கியுள்ள ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு செல்பி, போட்டோ எடுத்து செல்கின்றனர். 'இம்மாதம் இறுதிக்குள் பெரும்பாலான வகைகளான ரோஜாக்கள் பூத்து குலுங்கும், ' என, பூங்கா நிர்வாகம் தெரிவித்தனர்.