கோத்தகிரி அம்மன் நகர் பகுதி சேர்ந்த லாரன்ஸ் என்பவர் மாற்றுத்திறனாளி. இவர் கடந்த 30 வருடங்களாக இவருக்கு தள்ளுவண்டி வைக்க அனுமதி தரக்கோரி மனுக்களை அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காததால் உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியில் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அப்போது தனக்கு உடனடியாக தள்ளுவண்டி அனுமதி தருமாறு கதறி அழுதார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.