கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் சிறுத்தை உலா வந்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர் சிறிது நேரம் சாலையில் உலா வந்த சிறுத்தை வாகன முகப்பு வெளிச்சத்தை கண்டவுடன் மின்னல் வேகத்தில் அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் ஓடியது.
இரவு நேரங்களில் உலா வரும் வனவிலங்குகளை வனத்துறையினர் கண்காணித்து பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.