நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல் முருகன்

1054பார்த்தது
கூடலூர் ஸ்ரீ மதுரை பகுதியில் பழங்குடியினர் வாத்தியங்களுடன் செண்டை முழங்க பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எல். முருகனுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பின்பு வேட்பாளர் எல். முருகன் பழங்குடியினர் உடன் நடனமாடி தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அனைவருக்கும் விசு பண்டிகை வாழ்த்தை தெரிவித்து எல். முருகன் பேச்சை தொடங்கினார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் மலைவாழ் மக்களுக்காக இந்தியா முழுவதும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் ஒவ்வொரு மலைவாழ் மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் பாரதப் பிரதமர் திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்றும்
பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த முர்மு அவர்களை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்து உள்ளார் நமது மோடி ஜி.

பழங்குடியினர் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதே நமது பிரதமரின் ஒரே நோக்கம் நவம்பர் 15ம் தேதியை நமது பிரதமர் அவர்கள் வனவாசி தினமாக அறிவித்துள்ளார்கள். ஸ்ரீ மதுரை பஞ்சாயத்தானது பாரதிய ஜனதாவின் கோட்டையாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

கடவுள் இல்லை நாட்டுக்கு எதிராக பிரிவினைவாதை பேசும் திமுகவுக்கு இடம் அளிக்க வேண்டாம் ஆகவே மூணாவது பட்டனில் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து பல லட்சம் வாக்கு வித்தேசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி