2021-ம் ஆண்டு மலையாளத்தில் 'நிழல்' என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு 'மாய நிழல்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்தினை பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கியுள்ளார். இந்த திரில்லர் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நயன்தாராவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்த நிலையில், 'மாய நிழல்' திரைப்படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 30-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.