வரகூராம்பட்டி: அடுக்குமாடி குடியிருப்பு வீடு விளங்கும் விழா

83பார்த்தது
வரகூராம்பட்டி: அடுக்குமாடி குடியிருப்பு வீடு விளங்கும் விழா
திருச்செங்கோடு ஒன்றியம், வரகூராம்பட்டி பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ. 76. 48 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 846 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்து முதல் 104 பயனாளிகளுக்கு வீடுகளின் சாவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ஆர். ஈஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ்MP, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் தங்கவேல், திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகர கழக செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் திரு. SPK. செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி