கொல்லிமலையில் பழங்குடியினருக்கு நலவாரிய அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

65பார்த்தது
கொல்லிமலையில் பழங்குடியினருக்கு நலவாரிய அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
கொல்லிமலையில் வசிக்கும் பழங்குடியின மக்கள், பழங்குடியினர் நல வாரியத்தில் உறுப்பினராகி பயன்பெறலாம். இதற்காக கொல்லிமலையில் உள்ள 14 பஞ்சாயத்துக்களிலும், சிறப்பு முகாம்கள் நடத்தி பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட உள்ளது. மலைவாழ்மக்கள் தங்களின் ரேசன் கார்டு, ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்பத்தலைவரின் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் விண்ணப்பித்து அடையாள அட்டை பெறலாம். சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு பஞ்சாயத்து அலுவலகத்திலும் காலை 10 மணி துவங்கி, மாலை 5. 455.45 மணிவரை நடைபெறும். பஞ்சாயத்து வாரியாக முகாம் நடைபெறும் விபரம்: பைல்நாடு கிராம பஞ்சாயத்து மார்ச் 26ம் தேதி, சித்தூர் நாடு 27ம் தேதி, எடப்புளி நாடு பஞ்சாயத்தில் 28ம் தேதி நடைபெறும். தேனூர் நாடு ஏப்.ஏப்ரல் 1ம் தேதி, குண்டனி நாடு ஏப்.ஏப்ரல் 2ம் தேதி, குண்டூர் நாடு 3ம் தேதி, பெரக்கரைநாடு 4ம் தேதி, சேளூர் நாடு 8ம் தேதி, தின்னனூர் நாடு 9ம் தேதி, திருப்புளி நாடு 10ம் தேதி, வளப்பூர் நாடு 11ம் தேதி, வாழவந்திநாடு பஞ்சாயத்தில் 15ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும்

தொடர்புடைய செய்தி