காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

51பார்த்தது
காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
சேந்தமங்கலம் அருகே மின்னாம்பள்ளி ஊராட்சியில் நைனாமலை அடிவாரபகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக வழங்குவதில்லை என்றும், 13 நாட்க ளுக்கு ஒரு முறை மட்டுமே உப்பு நீர் வழங்கப்பட்டு வருவதாகவும், அதிலும் சுமார் அரை மணிநேரமே வழங்குவதால் அங்கு தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதியினர் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் நேற்று காலை 8. 30 மணி அளவில் நைனாமலை அடிவாரத்தில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் பிரதான சாலையில் திடீரென்று காலிக்குடங்களை வைத்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் சென்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி