மின் கட்டண உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

68பார்த்தது
மின் கட்டண உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிறுத்த பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக அரசு மின்கட்டண உயர்த்தியதை வாபஸ் பெற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் சிறு குறு நடுத்தர உள்ளிட்ட அனைத்து தொழில்களும் கடும் நெருக்கடியின் மத்தியில் தொழில் செய்ய முடியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில் தொடர்ந்து மின் கட்டண உயர்வு ஏறிக்கொண்டே இருப்பதால் வீடுகள் உட்பட கடும் பாதிப்பை உருவாக்கும் புதிய மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்.

ஒன்றிய அரசு தமிழகத்தில் அமுல்படுத்த உள்ள ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மாதாமாதம் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் மின் தேவைக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து தமிழ்நாடு அரசு மின்சாரம் வாங்குவதை கைவிட்டு தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில் திட்டங்களை உருவாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி