ராசிபுரம் ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் நியமனம்

533பார்த்தது
ராசிபுரம் ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் நியமனம்
ராசிபுரம் ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மத்திய அரசின் ரயில்வே துறை பரிந்துரையை ஏற்று, சேலம் கோட்ட ரயில்வே துறை இவா்களை நியமனம் செய்துள்ளது.

இதில் பாஜகவைச் சோ்ந்த ஆா். லோகேந்திரன், என். எஸ். ஹரிஹரன், என். சித்ரா, மணிகண்டன், தமிழரசன் ஆகியோா் ஆலோசனை குழு உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் லாபநோக்கம் ஏதுமின்றி ரயில் நிலைய ஆலோசனை குழு உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் மூன்றாண்டுகளுக்கு இந்த பொறுப்பில் இருப்பா். ஆலோசனைக் குழு உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி