30 வருடங்களுக்கு முன்பு படித்த அரசுபள்ளி மாணவர்கள் சந்திப்பு

51பார்த்தது
30 வருடங்களுக்கு முன்பு படித்த அரசுபள்ளி மாணவர்கள் சந்திப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு பள்ளியில், 30 வருடங்களுக்கு முன்பு, 10ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்து கொண்டனர். ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 1995ஆம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

சுமார், 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு உள்ளூரில் வசிக்கும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக முன்னாள் பள்ளி மாணவர்கள் சார்பில் பள்ளி நுழைவு வாயில் ஆர்ச், கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடித்து கொடுத்திருந்தனர்.

நேற்று முன்தினம், 400 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கனி மரங்களை வழங்கினர். நேற்று காலை பள்ளி வளாகத்தில் சந்திப்பு விழா தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் வருதராஜ் தலைமை வகித்தார். முன்னாள் ஆசிரியர்களான கண்ணன், பெரியசாமி, மணிக்கம், அய்யாவு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி