தேர்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

55பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் பொது மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுமார் 10, 000க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1, 628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி வாக்களிக்க பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
மேலும், முதல்முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களுக்கு கல்லூரிகளில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் நாளான 19. 4. 2024 அன்று தங்களது வாக்கு இடம் பெற்றுள்ள வாக்குச்சாவடிக்கு காலை 7. 00 மணிக்கு சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும். அதோடுமட்டுமல்லாமல் தங்களது உறவினர், நண்பர்களையும் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொருவரின் வாக்கும் மிக முக்கியமானது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி