கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

3988பார்த்தது
கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் வசிப்பவர் சரவணன், 41. தனியார் நிறுவன பணியாளர். நேற்று முன்தினம் தங்கள் மகன் பள்ளியின் ஆண்டுவிழா என்பதால், அனைவரும் விழாவை பார்க்க சென்றனர். இரவு இவருக்கு வந்த போனில், இவரது வீட்டு கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றி எரிகிறது என தகவல் வந்தது. உடனே நேரில் வந்து பார்த்த போது, வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த தீயணைப்பு படையினர் இரண்டு மணி  நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கல்வி சான்றிதழ்கள், வீடு பத்திரங்கள், ரொக்கப்பணம் ஒரு லட்சத்து 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தேங்காய்கள், நகை 9 பவுன், கணினி, லேப்டாப், மொபைல் போன், பட்டுச் சேலைகள் உள்ளிட்ட அனைத்து துணிமணிகள், சமையல் பாத்திரங்கள், பீரோ, 4 டேபிள், 4 நாற்காலிகள், டி. வி. எஸ். 50 டூவீலர் என அனைத்தும் தீயில் எரிந்து சேதமானதாக  கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதம் முன்புதான் ஓலை மேயப்பட்டு, அதன்  மேல் தகர சீட் போடப்பட்டு 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில்  வீடு கட்டப்பட்டது என உரிமையாளர் சரவணன் கூறினார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி