கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி

1076பார்த்தது
கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 02ஆம் நாள் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக 12. 01. 2024 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பயிலக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை மாநாட்டுக் கூட்ட அரங்கில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ. 5000இரண்டாம் பரிசு ரூ. 3000, மூன்றாம் பரிசு ரூ. 2000என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.
கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு 11. 01. 2024-இக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டிகளுக்கு கல்லூரி மாணவர்களுக்கு 1. காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை 2. வெள்ளையனே வெளியேறு இயக்கம் 3. சத்திய சோதனை 4. மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
கல்லூரிப் போட்டி காலை 09. 30 மணிக்கு தொடங்கப்பெறும். இப்போட்டிகளில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ ஃ மாணவிகள்; கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி