திட்டச்சேரியில் மின்கம்பி உரசி தீப்பிடித்து எரிந்தது

2241பார்த்தது
திட்டச்சேரியில் மின்கம்பி உரசி தீப்பிடித்து எரிந்தது
திட்டச்சேரியில் டிராக்டரில் வைக்கோல் ஏற்றி சென்ற போது மின்கம்பி உரசி தீப்பிடித்து எரிந்தது

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான் சாவடியில் அறுவடை முடிந்து வயலில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் தரைகளை விவசாயிகள் டிராக்டரில் ஏற்றுக்கொண்டு மெயின் ரோடு பகுதிக்கு கொண்டு வந்தனர். அப்போது வயல் பகுதியில் வாழ்வாக சென்ற உயர் மின் அழுத்த கம்பிகளில் வைக்கோலில் உரசி தீப்பற்றிக் கொண்டது. சரசரவென தீப்பற்றி 30 கட்டு வைக்கோல் கட்டுகள் எரிந்தை கண்ட விவசாயிகள் மற்றும் டிராக்டர் டிரைவர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

பின்னர் வைக்கோல் தரைகளை கீழே தள்ளிவிட்டு அணைப்பதற்குள் வைக்கோல் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்த தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு தாழ்வாக சென்று மின்கம்பிகளை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் கூறிச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி