மயிலாடுதுறை அடுத்த தர்மபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி பெருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு மாங்கல்யதாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது,