ஏப்ரல் 23ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது எம்ஐ 11 அல்ட்ரா

21162பார்த்தது
ஏப்ரல் 23ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது  எம்ஐ 11 அல்ட்ரா
சமீபத்தில் எம்ஐ 11 அல்ட்ரா கைப்பேசி உலகளவில் வெளியிடப்பட்டது. இன்னும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. எம்ஐ 11 அல்ட்ரா ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது எம்ஐ நிறுவனத்தின் மிகவும் சிறப்புவாய்ந்த ஸ்மார்ட்போனாகும். நிறுவனத்தின் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வு 2021 ஏப்ரல் 23 ஆம் தேதி அமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் எம்ஐ 11 அல்ட்ரா 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலையானது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.1,02,700 ஆக இருக்கிறது. இந்த விலையானது பிற நாட்டு சந்தைகளைவிட குறைவாக இருக்கிறது. சீனாவில் எம்ஐ 11 அல்ட்ரா 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.66,400 ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.72,000 ஆகவும் மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு விலை இந்திய மதிப்புப்படி ரூ.77,500 ஆக இருக்கிறது. இது 6.8 இன்ச் டபிள்யூக்யூஎச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. நான்கு பக்கங்களிலும் வளைந்த டிஸ்ப்ளே வசதி இருக்கிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பித்த டிஸ்ப்ளே இருக்கிறது. புதிய கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாப்பு வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எம்ஐ 11 அல்ட்ரா ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது அட்ரினோ 660 ஜிபியூ உடன் வருகிறது. மூன்று பின்புற கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா, இரண்டு 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் கேமராவுடன் இருக்கிறது. டெலி-மேக்ரோ லென்ஸ் 5x ஆப்டிகல் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் ஆகிய ஆதரவோடு இது வருகிறது. பின்புறத்திலும் காட்சி வசதி இருப்பதால் பின்புற கேமராவையும் பயன்படுத்தி செல்பி எடுக்கலாம் என்பது இதன் கூடுதல் அம்சமாகும்.