ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த, மருத்துவ மாணவர் தற்கொலை

53பார்த்தது
ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த, மருத்துவ மாணவர் தற்கொலை
சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த, மருத்துவக் கல்லூரி மாணவர் இன்று (மே 16) தற்கொலை செய்துகொண்டார். சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் (23) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தந்தையிடம் ரூ.24 ஆயிரம் பணம் கேட்டதாகவும், அதற்கு தந்தை தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியதோடு, ரூ.4,000 மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி