தெலங்கானாவில் ‘மஹாலட்சுமி திட்டம்’ இன்று முதல் அமல்

989பார்த்தது
தெலங்கானாவில் ‘மஹாலட்சுமி திட்டம்’ இன்று முதல் அமல்
தெலங்கானாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணம் வழங்கும் ‘மஹாலட்சுமி திட்டம்’ இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய திட்டங்களை அமலுக்கு கொண்டு வர தயாராகியுள்ளார். தமிழகத்தைப் போல், தெலங்கானாவில் மகளிருக்கு இலவச பேருந்து சேவையை வழங்கும் ‘மஹாலட்சுமி திட்டம்’ இன்று அமலுக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி