உசிலம்பட்டி: 50க்கும் மேற்பட்ட கோழிகள் இறப்பு

65பார்த்தது
உசிலம்பட்டி:  50க்கும் மேற்பட்ட கோழிகள் இறப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ராஜேஷ் என்பவர், தனது தோட்டத்தில் 17 ஆடுகள், 13 மாடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கோழிகளை வைத்து வளர்த்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று (மார்ச் 20) இரவு தோட்டத்திற்கு வந்த இரு நாய்கள் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 ஆடுகளை கடித்து கொன்றது, மேலும் 2 ஆடுகள் படுகாயமடைந்த சூழலில் அவைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் ஆடுகளை கடித்து கொன்ற நாய்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தோட்டத்தில் இருந்த சிசிடிவி-யை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தோட்டத்திற்கு வந்த நாய்கள் ஆடுகளை கடித்து கொன்று திண்ணும் காட்சிகள் பதிவாகி இருந்தன, இந்த காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி