ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனை தொடக்கம்.

594பார்த்தது
ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனை தொடக்கம்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகள் உடற்தகுதி பரிசோதனை நேற்று தொடங்கியது.

மதுரை அவனியாபுரத்தில் தை பொங்கலன்று (ஜனவரி 15 ம் தேதி)
ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம், அதனை தொடர்ந்து பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளை கால்நடை துறையினர் பரிசோதித்து சான்றிதழ் அளித்த பின்னரே, ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்படும்.

இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் உடற்தகுதி பரிசோதனை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

விளாச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவர் டாக்டர் சிவகுமாரின் தலைமையில் மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகளின் கொம்புகள் உயரம்.
கொம்புகளின் இடைவெளி, காளைகளின் உயரம் 132செமீ, திமில் அளவு மற்றும் 4 பற்கள் உள்ளதா மேலும் காளைகளுக்கு மூன்று முதல் எட்டு வயதிற்கு உட்பட்டு உள்ளதா உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்து அதற்கு தகுதி சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி