வசதியின்றி அவதிபடும் பள்ளி குழந்தைகள்.

1005பார்த்தது
வசதியின்றி அவதிபடும் பள்ளி குழந்தைகள்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் வசதிகள் ஏதுமின்றி பள்ளி குழந்தைகள் அவதிபடுவதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே பாடசாலை செல்லும் வழியில், தனியார் மழலை பள்ளி செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேலும், இது பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருவதாகவும், ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டாலோ குழந்தைகள் வெளியே செல்வதற்கான போதிய வழிகள் இல்லையாம்.

மேலும் , இந்த பள்ளி அடிக்கடி இடம் மாற்றி வருவதாகவும், ஒரே இடத்தில் செயல்படுவது இல்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இப்பொழுது செயல்பட்டு வரும் இந்த பள்ளி இதற்கு முன்பு உணவு விடுதியாக இருந்ததாகவும், குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியாளர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழந்தைகளின் உயிர்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரையும் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் மதுரை மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு இன்றி இயங்கும் தனியார் பள்ளிகளை மதுரை மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் போதிய வசதி இன்றி செயல்படும் தனியார் பள்ளிகளை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி