நடிகர் விஜய் அவசரப்பட்டு விட்டார். முன்னாள் எம்எல்ஏ பேட்டி.

1586பார்த்தது
நடிகர் விஜய் அவசரப்பட்டு விட்டார். முன்னாள் எம்எல்ஏ பேட்டி.
மதுரை விமான நிலையத்தில் பார்வர்ட்பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன் பேட்டியளித்தார்

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு

ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று முதலில் நாங்கள் தான் குரல் கொடுத்தோம். பாமகவினர் கேட்கிறார்கள். நாங்களும் கேட்கிறோம் எங்கள் ஜாதியினரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் முக்கிய கோரிக்கை.

டி என் டி ஜாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடி குறித்த கேள்விக்கு

மாநிலத்திற்கு எம்பிசி சான்றிதழும் மத்திய அரசு பணிக்கு டிஎன்டி என்று கொடுப்பது முற்றிலும் தவறானது. மத்திய அரசில் இருந்து கொடுக்கப்படும் டிஎன்டி சலுகை இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கு நாடகம் ஆடுகிறார்கள். இந்தத் தேர்தலில் நாங்கள் லேசில் விடமாட்டோம்.

நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு

இந்த ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம். ஆனால் நடிகர் விஜய் தற்போது சினிமாவில் பிஸியாக உள்ளார் எனவே அரசியலில் அவசரப்பட்டு விட்டார் என்று நினைக்கிறேன். கட்சியை வளர்க்க நினைப்பது தவறில்லை ஆனால் இந்த வயதில் வர வேண்டும் என்று அவசியம் இல்லை. என்பதுதான் பார்வர்ட் பிளாகின் கருத்து என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி