சரக்கு வாகனத்தில் பெட்ரோல், டீசல் கொண்டு சென்ற நபர் கைது.

73பார்த்தது
சரக்கு வாகனத்தில் பெட்ரோல், டீசல் கொண்டு சென்ற நபர் கைது.
மதுரை கருவேலம்பட்டி அருகே சரக்கு வாகனத்தில் பெட்ரோல், டீசலை கொண்டு சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அருகே சுற்றுச் சாலையில் கருவேலம் பட்டி விலக்குப் பகுதியில் ஆஸ்டின்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கை செய்தபோது, மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கிச் சென்ற சரக்கு வாக னத்தை நிறுத்தி சோதனையிட்டதில் வாகனத்தில் 90 லிட்டர் பெட்ரோல், 40 லிட்டர் டீசல் கேன்களில் வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து வாகன ஓட்டுநரான கள்ளிக்குடி உலகாணியைச் சேர்ந்த முருகன் (45) முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறி னார். இதையடுத்து, பாதுகாப்பு உபகரணங்கள் எது வும் இல்லாமல் வாகனத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய பெட்ரோல், டீசலை கொண்டு வந்ததால் போலீசார் முருகனைக் கைது செய்து, பெட்ரோல் டீசலை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி