தண்ணீர் வற்றாத வடகரை ரயில்வே தரைப்பாலம்

566பார்த்தது
தண்ணீர் வற்றாத வடகரை ரயில்வே தரைப்பாலம்
தண்ணீர் வற்றாத வடகரை ரயில்வே தரைப்பாலம்

திருமங்கலத்தில் இருந்து வடகரை கிராமம் வழியாக பாண்டி நகர், வடகரை, வடகரை புதூர் மற்றும் நடுகோட்டை கீழக்கோட்டை வழியாக கூட கோவிலுக்கு சாலை உள்ளது.

திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் செல்லும் ரயில்வே லையனுக்காக வடகரை செல்லும் ரோடு மற்றும் மேலக்கோட்டை செல்லும் ரோட்டில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தினசரி 75 முறை மூடி திறக்கப்படும் திருமங்கலத்தில் இருந்து அவசர காலத்தில் செல்லும் வகையில் திருமங்கலம் நகரை ஒட்டி வடகரை ரயில்வே தரைபாலம் அமைக்கப்பட்டது திருமங்கலம் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள கேட் அடைத்துள்ள பாண்டியன் நகர் ரயில்வே கேட்டு இரண்டும் மூடப்படும் போது பலரும் வடகரை பகுதிக்கு செல்வது வழக்கம் ஆனால் கடந்த ஓராண்டாக வடகரை தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது வடகரை பஞ்சாயத்து சார்பில் மோட்டார் மூலமாக தண்ணீர் வெளியேற்றினாலும் பாலத்தில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி வருவது பொதுமக்களுக்கு கடும் சிரமத்தினை ஏற்படுத்தி வருகிறது.

இந்த அவல நிலையை போக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி