ஆனி மகத்தை முன்னிட்டு பிறந்த ஊரில் மாணிக்கவாசகர் வீதி உலா சிவனடியார்கள் பங்கேற்று தரிசனம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாத ஊரில் ஆனி மகத்தினை முன்னிட்டு திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற பொன்மொழிக்கேற்ற , திருவாசகம் இயற்றிய மாணிக்கவாசகர் பெருமான் பிறந்த இடத்தில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் தரிசனம், மாணிக்கவாசகப் பெருமான் முக்தி அடைந்த நாளான ஆனி மகத்தை கொண்டாடும் விதமாக திருவாதவூரில் உள்ள அருள்மிகு திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோவிலில் இருந்து மாணிக்கவாசகர் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவர் பிறந்த இடத்தில் உள்ள மாணிக்கவாசகர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மீண்டும் கொண்டுவரப்பட்டார் இந்த நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் பக்தர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்