மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் முக்கிய நிகழ்வாகும். இந்த விழாவில் நேற்று முன்தினம் கோவிலில் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று கஜேந்திர மோட்சம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவத்தில் இன்று (மார்ச். 14) காலை ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பட்டாகி மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு எழுந்தருளினார். தெப்பத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தெப்ப குளக்கரையை தேவியர்களுடன் சுற்றி வந்தது. பின்னர் தெப்பத்தின் கிழக்குபுறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தெப்பத்திலிருந்து மாலை பூஜைகள் முடித்து மீண்டும் தெப்பத்தை சுற்றி குளக்கரையை எழுந்தருளுவார். இந்த தெப்ப உற்சவத்தை காண சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.