மதுரையில் யோகா தின விழா.

81பார்த்தது
மதுரையில் யோகா தின விழா.
மதுரை, ஜூன் 8: இந்திய சுற்றுலா கழகம், மகாத்மாகாந்தி யோகா நிறுவனம் ஆகியன சார்பில், 10- ஆவது சர்வதேச யோகா தின விழா நேற்று நடைபெற்றது.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள கீதா நடன கோபால நாயகி மந்திரில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மகாத்மா காந்தி யோகா நிறுவனத்தின் நிறுவனர் த. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பொது மக்களுக்கு சூரிய நமஸ்காரம், பிராணயாமம்,
உடல் தளர்வு பயிற்சி உள்ளிட்ட யோகாசனங் களை மகாத்மா காந்தி யோகா நிறுவனத்தின் இயக்குநர் கே. பி. கங்காதரன் வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஹார்லிராம் மருத்துவமனை யின் மூத்த ஆலோசகர் சாவித்திரி ரமேஷ், பொறி யாளர் சுரேஷ் பாக்கியம், இந்திய சுற்றுலா கழகத்தின் உதவி இயக்குநர்கள் எஸ். பத்மாவதி, என். வேல்முருகன், மகாத்மாகாந்தி யோகா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி