மதுரை பழங்காநத்தம் மார்கழி மாதத்தை முன்னிட்டு வாசலில் வண்ண கோலம் இட்ட பெண்கள்
மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தி வரக்கூடிய வேளையில் விரதம் இருந்து சபரிமலைக்கும் பழனி உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் சென்று வரக்கூடிய நிலையில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசலில் மாக்கோலம் இடுவது வழக்கம்.
இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் சேர்ந்த பெண்கள் தங்களது வீட்டு வாசல்களில் வண்ணக் கோலங்கள் மறைந்து வருகின்றனர் குறிப்பாக பள்ளி கொண்ட பெருமாள் ராதே கிருஷ்ணா உள்ளிட்ட கோலங்களை வரைந்து வருகின்றனர்.
என்னதான் இன்றைய நவனாகிய காலகட்டத்தில் கோலத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் களையும் பெயிண்டுகளையும் வரைந்து வரக்கூடிய வேலையில் இன்றளவும் கோலமாவை பயன்படுத்தி வீட்டு வாசல்களில் பெண்கள் வண்ண வண்ண கோலம் இட்டு வருவது வரவேற்கத்தக்கது.