போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு பிரச்சாரம்.

78பார்த்தது
போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு பிரச்சாரம்.
மதுரை இரயில்வே நிலையம் முன்பு போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது.

மதுரை இரயில் நிலையம் முன் முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு காவல்துறை மற்றும் அப்துல் கலாம் முதலுதவி நல அறக்கட்டளை இணைந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றி வரக்கூடிய வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகள், மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரச்சுரங்களை வழங்கினார்கள்.

இதில் தல்லாகுளம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன். திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி. சார்பு ஆய்வாளர்கள், , , சந்தனகுமார், லிங்ஸ்டன், நந்தகோபால், சமூக ஆர்வலர் முபீன், சக்தி முருகன், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி