விநாயகா் சதுா்த்தி முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்

78பார்த்தது
விநாயகா் சதுா்த்தி முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்
விநாயகா் சதுா்த்தி, வார விடுமுறை நாள்களையொட்டி மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளிலிருந்து 220 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். சிங்காரவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விநாயகா் சதுா்த்தி, வார இறுதி விடுமுறை நாள்களையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டத்துக்குள்பட்ட திண்டுக்கல், தேனி, விருதுநகா், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து செப். 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்துக்கு 120 பேருந்துகளும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 100 பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்படுகின்றன.

பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்கவும் முக்கியப் பேருந்து நிலையங்களில் அலுவலா்கள், பொறியாளா்கள், கண்காணிப்பாளா்கள், பணியாளா்கள், பயணச்சீட்டு ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கொடைக்கானல், கொல்லம், மூணாறு, திருப்பூா், கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, சேலம், நாகா்கோவில், திருச்செந்தூா், நெய்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், மன்னாா்குடி, கடலூா், நாகூா் வழித்தடங்களில் பயணிகள் சிரமமின்றி பயணிக்க இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி