விவசாயிகளுக்கான கருத்தரங்கு

80பார்த்தது
விவசாயிகளுக்கான கருத்தரங்கு
மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம், பாரதிய கிசான் சங்கம் சார்பில் சிறுதானியம் - சந்தை முதல் பண்ணை வரை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடந்தது. சங்கத்தலைவர் ரத்தினவேல் தலைமை வகித்தார்.

'நீர் ஆதாரம் முதல் சந்தை ஆதாரம்' வரை அமைப்பு இலச்சினையை நபார்டு வங்கி தனி இயக்குநர் ராமசீனிவாசன் வெளியிட்டார். அவர் பேசுகையில், ''விவசாயிகளுக்காக கிராமப்புறங்களில் பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் நபார்டு வங்கி முன்னிலையில் உள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட அமைப்பின் மூலம் நீர் ஆதாரத் திட்டங்கள் நிறைவேறுவதற்கு உதவுவோம்'' என்றார். சிறுதானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தை வாய்ப்பு குறித்து மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி டீன் காஞ்சனா பேசினார். கிசான் சங்க தேசிய துணைத்தலைவர் பெருமாள், தமிழ்நாடு அமைப்பு அமைப்பு செயலாளர் சிவக்குமார், மாநில செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி