பாரா தடகளம் மதுரை வீரர்கள் சாதனை

50பார்த்தது
பாரா தடகளம் மதுரை வீரர்கள் சாதனை
பாரா தடகளம் மதுரை வீரர்கள் சாதனை

மதுரை: பெங்களூருவில் தேசிய அளவில் 13வது சப் ஜூனியர் மற்றும் ஜூனியர் பாரா Shil சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் தமிழகத்தில் இருந்து 38 பேர் பங்கேற்றனர். 10 தங்கம், 12 வெள்ளி, 20 வெண்கலப்பதக்கங்களுடன் தமிழக அணி 5ம் இடம் பெற்றது. பிரிவு 13 க்கான 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் போட்டிகளில் மதுரை அபர்ணா 2 தங்கம் வென்றார். பிரிவு 44க்கான நீளம் தாண்டுதலில் ஹரிவேந்திர பிரபு தங்கம், அதே பிரிவு குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் வருண்

வெண்கலம் வென்றனர். பிரிவு 12 க்கான ஈட்டி எறிதலில் அகிலேந்திரன் வெள்ளி, குண்டு எறிதலில் வெண்கல பதக்கம் வென்றார். பிரிவு 55 க்கான ஈட்டி எறிதலில் மணியரசு வெள்ளி வென்றார். பிரிவு 11 க்கான குண்டு, வட்டு எறிதல் போட்டிகளில் கார்த்திகேயன் 2 வெண்கல பதக்கங்களை வென்றார். மதுரை வந்த பயிற்சியாளர் ரஞ்சித்குமார் மற்றும் வீரர்கள் கலெக்டர் சங்கீதாவை சந்தித்து பாராட்டு பெற்றனர். ஆணைய மதுரை மண்டல மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி