மதுரை மக்களவைத் தொகுதி: மாா்க்சிஸ்ட் கம்யூ. நன்றி அறிவிப்பு

83பார்த்தது
மதுரை மக்களவைத் தொகுதி: மாா்க்சிஸ்ட் கம்யூ. நன்றி அறிவிப்பு
மதுரை மக்களவைத் தொகுதி: மாா்க்சிஸ்ட் கம்யூ. நன்றி அறிவிப்பு

மதுரை மாநகா் மாவட்டக்குழுச் செயலா் மா. கணேசன், மதுரை புகா் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் போட்டியிட்ட சு. வெங்கடேசனுக்கு மக்கள் மீண்டும் வெற்றி வாய்ப்பை அளித்துள்ளனா்.

இந்தியா கூட்டணியின் சாா்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மீண்டும் களமிறங்கிய சு. வெங்கடேசனுக்கு இந்த முறை வாக்காளா்கள், வாக்குகளை வாரி வழங்கியதால், தன்னை அடுத்து வந்த பாஜக வேட்பாளா் ராம சீனிவாசனை விட கூடுதலாக 2, 09, 409 வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்தனா்.

எனவே, வெற்றி வாய்ப்பை அளித்த மக்களுக்கும், தோ்தல் பணியில் ஈடுபட்ட, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், திமுக தலைவா்கள், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றியை
தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி