வங்கி ஏடிஎம் க்கு கொண்டு சென்ற பணம் பறிமுதல்

79பார்த்தது
வங்கி ஏடிஎம் க்கு கொண்டு சென்ற பணம் பறிமுதல்
மதுரையில் வங்கி ஏடிஎம் க்கு கொண்டு சென்ற உரிய ஆவணம் இல்லாத 1, 53, 00, 000 பணம் பறிமுதல் செய்து ஆர் டி ஓ அலுவலகத்தில் விசாரணை.

நாடாளுமன்றத் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு அந்த பணம் கருவூலத்தில் வைக்கப்படுவது வழக்கம், அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் 70 பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை உத்தங்குடி பகுதியில் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, தனியார் வங்கி ஏடிஎம்க்கு பணம் வைப்பதற்காக கொண்டு சென்ற வாகனத்தில் உள்ள பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் அந்த பணம் ரூபாய் 1, 53, 00, 000 பறிமுதல் செய்யப்பட்டு, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர் டி ஓ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி