பாஜக வின் உருட்டல்கள் இந்த தேர்தலில் எடுபடாது

70பார்த்தது
பாஜக வின் உருட்டல்கள் இந்த தேர்தலில் எடுபடாது
மதுரை மாநகர் 59, 60 வது வார்டு எல்லீஸ் நகர், வைத்தியநாதபுரம், போடி லைன் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசுகையில், தொகுதி மக்களுக்காக ஐந்தாண்டுகளாக
சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்றாண்டுகளாக அமைச்சராகவும் தான் நிறைவேற்றிய திட்ட பணிகளை பட்டியலிட்டார்.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் மட்டும் தொகுதி மேம்பாட்டு நிதியில் 239 பணிகள் 22 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளதாக கூறிய அவர், எல்லீஸ் நகர் பகுதிக்கு மட்டும் 31 பணிகள் 2 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளதாக கூறினார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை தாம் வெளியிடக்கூடிய செயல்பாட்டு அறிக்கை இல்லம் தேடி வருகிறதா என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பிய அவர், மாநில அளவில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் நல திட்டங்கள் ஆன கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம் ஆகியவற்றின் செயலாக்கம் மற்றும் விளைவுகள் குறித்து விரிவாக உரையாற்றினார்.

உலகத்திலேயே தாங்கள்தான் பொருளாதார மேதை என்பது போல் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி விட்டதாக பொய்யான தகவல்களை பொதுமக்களிடையே உருட்டுகின்றனர். இந்த உருட்டல்கள் எல்லாம் எதிர் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எடுபடாது என்றார்.

தொடர்புடைய செய்தி