தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்

61பார்த்தது
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: ஈ. வி. கே. எஸ். இளங்கோவன்

மதுரை: தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

அதிமுகவுடன் சில காலம் கூட்டணியில் இருந்ததால்தான், பாஜக இருப்பதே மக்களுக்கு தெரிந்தது. காங்கிரஸ் கட்சி எப்போதும் மாநிலக் கட்சிகளை கைவிட்டது இல்லை. பாஜக ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளது. இதை உணா்த்தும் விதமாகவே மக்கள், மோடி ஆட்சிக்கு தற்போது பாடம் புகட்டியுள்ளனா். தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு, வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அண்ணாமலையால் உள்ளாட்சித் தோ்தலில்கூட வெற்றி பெற இயலாது. தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன் காலத்தில் இருந்ததைவிட தற்போது பாஜக தமிழகத்தில் வலுவிழந்துள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலுக்குள் அந்தக் கட்சியே காணாமல் போய்விடும். இப்போது மட்டுமின்றி, எப்போதும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்றாா் அவா்.

பேட்டியின் போது, மதுரை மாநகா் காங்கிரஸ் தலைவா் வீ. காா்த்திகேயன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.