சவுக்கு சங்கருக்கு மீண்டும் ஜாமீன் மனு

66பார்த்தது
சவுக்கு சங்கருக்கு மீண்டும் ஜாமீன் மனு
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து யுடியூப் சேனலில் அவதுாறு கருத்துக்களை தெரிவித்ததாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை மே 4 ல் கைது செய்தனர். தேனி பூதிப்புரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர், உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.

கைதான சவுக்கு சங்கருக்கு ஜூன் 19 வரை காவல் நீட்டிப்பு செய்து மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமின் மனுவை வாபஸ் பெற்றதால், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை நீதிபதி செங்கமலச்செல்வன் நேற்று விசாரித்தார். ஜூன் 13 க்கு ஒத்திவைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி