குருவித்துறை சிற்றணையில் மாயமான இரு மாணவர்கள் சடலமாக மீட்பு.

7653பார்த்தது
குருவித்துறை சிற்றணையில் மாயமான இரு மாணவர்கள் சடலமாக மீட்பு.
மதுரை குருவித்துறை அருகே சிற்றணையில் குளிக்க சென்ற மாணவர்கள் உயிரிழந்தனர்.

மதுரை மாநகரை சேர்ந்த கார்த்திக் ரமணன் என்பவரின் மகன் யாதேஷ் தினகரன்(17). மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று டியூசன் சென்றவர் வீடு திரும்பவில்லை

இது குறித்து கார்த்திக் ரமணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். யாதேஷ் தினகரனின் நண்பரான விளாங்குடி பகுதியைச் சேர்ந்த ஜாசன்ஆஸ்ட்ரிக் காணாமல் போனது தெரிந்த நிலையில் போலீசார் இவர்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது குருவித்துறை சித்தாதிபுரம் வைகை ஆற்றில் சிற்றனையில் காண்பித்தால் அங்கு சென்று பார்த்த போது இருவரின் காலணிகள், பேக் உள்ளிட்டவைகள் கிடந்தது.

போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் சோழவந்தான் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் நிலைய அலுவலர் ஹவுஸ் பாட்சா தலைமையில் தீயணைப்படையினர் பொதுப்பணித்துறைக்கு தகவல் கொடுத்து தண்ணீர் வரத்தை நிறுத்தினர்.

பின்னர் ஆற்றில் இறங்கி தீயணைப்பு படையினர் தேடுதலில் இறங்கினர். இதில் மாயமான இரண்டு மாணவர்களுடைய உடல் பிணமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி