கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி.

66பார்த்தது
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.

மதுரை தெற்குவாசல் பகுதி தவிட்டுச் சந்தையை சேர்ந்த நாகராஜன் (65) என்பவர் நெல் வியாபாரி.
இவருக்கு சமயநல்லூர் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் சொந்தமான நிலம் உள்ளது. நாகராஜன் அங்கு தங்கி விவசாயம் செய்து வந்தார்.
இந் நிலையில் நேற்று பிற்பகலில் அங்குள்ள தோட்டக் கிணற்றின் அருகே அவர் வேலை பார்த்துக் கொண் டிருந்தபோது, பலத்த மழை பெய்ததால், கால் தவறி அவர் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்த அவர் கிணற்றில் மூழ்கி பலியானார்.

இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி