வாடிப்பட்டி தாலூகாவில் ஜமாபந்தி.

71பார்த்தது
வாடிப்பட்டி தாலூகாவில் ஜமாபந்தி.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் நாளை 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மதுரை மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் நாளை ஜமாபந்தி தொடங்குகிறது.

முதல்நாள் தென்கரை உள்வட்டத்தை சேர்ந்த அயன்தென்கரை குரூப் கோவில் தென்கரை குரூப். முள்ளிப்பள்ளம், கருப்பட்டி, குப்பட்டி, நாச்சிகுளம், இரு இரும்பாடி, அயன் குருவித்துறை குரூப், கோவில் குருவித்துறை குரூப், மேலக்கால் குரூப். கச்சிராயிருப்புகுரூப். மன்னாடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நடக்கும்.

2-ம்நாளான 13-ந்தேதி (வியாழக்கிழமை) சோழவந்தான். உள்வட்டத்தை சேர்ந்த திருமால்நத்தம், நெடுங்குளம், திருவேடகம், சித்தலாங்குடி, திருவாலவாயநல்லூர், நகரி குரூப். தட்டான்குளம், சேலைக்குறிச்சி, பேட்டை, உள்ளிட்ட சோழவந்தான் பகுதிகளுக்கும் நடக்கும்.

3-ம் நாள் 14-ந்தேதி தனிச்சியம் உள்வட்டம் சின்ன இலந்தைக்குளம் குரூப், அமரடக்கி குரூப், கொண்டையன்பட்டி, தனிச்சியம், சம்பக்குளம். கள் வேலிப்பட்டி. பெரியஇலந்தைக்குளம் குரூப், கட்டி மேய்க்கிப்பட்டி குரூப், கீழக்கரை குரூப் பகுதிகளுக்கு நடக்கும். ஆகிய

4-ம் நாள் 18-ந்தேதி அலங்காநல்லூர் உள்வட்டம் அழகாபுரி, தண்டலை குரூப். மணியஞ்சி குரூப், குமாரம் குரூப், அலங்காநல்லூர், அச்சம்பட்டி, இலவன்குளம், பண்ணைக்குடி, கல்லணை, வாவிடமருதூர் ஆகிய பகுதிகளில் அடங்கும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி